Connect with us

tech news

பீட்ஸ் ஹெட்போன் கிம் Spl எடிஷன் மாடல் அறிமுகம்!

Published

on

ஆப்பிள் நிறுவனம் கிம் கர்தாஷியன் உடன் இணைந்து ஸ்பெஷல் எடிஷன் பீட்ஸ் ஸ்டூடியோ ப்ரோ வயர்லெஸ் ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பீட்ஸ் ஸ்டூடியோ ப்ரோ கிம் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

ஏற்கனவே இந்த ஹெட்போன் நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடல் இதுவரை வெளியானதில் அதிநவீன பீட்ஸ் ஹெட்போனாக இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலைத் தொடர்ந்து பீட்ஸ் ஸ்டூடியோ ப்ரோ தற்போது ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் பீட்ஸ் ஸ்டூடியோ ப்ரோ கிம் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 37,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த ஹெட்போன் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் மூன், டியூன் மற்றும் எர்த் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் அதன் ஒரிஜினல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. ஹெட்போன்களுடன் அதே நிறத்தால் ஆன கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.

அதில் பீட்ஸ் எக்ஸ் கிம் பிரான்டிங் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் பிரத்யேக வொவென் கேபிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஹெட்போன்களில் 40மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இது தெளிவான ஆடியோ மற்றும் இரைச்சலை தடுக்கும் வசதியை வழங்குகிறது.

இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி மற்றும் டிரான்ஸ்பேரன்ஸி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்போனை முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும். இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை பயன்படுத்தும் போது 24 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

google news