job news
டிகிரி முடித்துள்ளீர்களா..? ‘ஐடிபிஐ’ வங்கியில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பீங்க.!!
பிரபல வங்கியான ஐடிபிஐ தங்களுடைய வங்கியில் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தகுதியான ஆட்கள் வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த வேலையில் சேர விண்ணப்பிபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ. 34000. ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காலியிடங்கள்
ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 1036 காலியிடங்கள் உள்ளன. அதன்படி, SC பிரிவுக்கு 160 இடங்கள்.
OBC பிரிவுக்கு 255 இடங்கள். ST பிரிவுக்கு 67 இடங்கள் மேலும், அதைப்போலவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய EWS பிரிவினருக்கு 103 இடங்கள். எந்த பிரிவையும் சேராதோர்களுக்கு 451 இடங்கள் என மொத்தமாக 1036 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி, மற்றும் வயது வரம்பு
அறிவிப்பின்படி, பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மே 01, 2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர் மே 2, 1998க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும் மே 1, 2003க்குப் பிறகு கிடையாது.
தேர்வு செயல்முறை
(Logical Reasoning, Data Analysis & Interpretation) – திறனறிவு , தரவுகள் பகுப்பாய்வு – 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள். மேலும், English Language ) ஆங்கில மொழி – 40 கேள்விகள் 40 மதிப்பெண்கள். ( Quantitative Aptitude) திறனறிவு தேர்வு – 40 கேள்விகள் 40 மதிப்பெண்கள். General/Economy/Banking Awareness/Computer/IT) /பொது/பொருளாதாரம்/வங்கி குறித்த கேள்விகள்/ கணினி/ஐடி – 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள் இருக்கிறது.
ஐடிபிஐ நடத்தும். 4 பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தேர்வுக்கும் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்று தகுதி பெற வேண்டும். அதிகபட்சம் 200 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், அவற்றைத் தீர்க்க 2 மணிநேரம் நேரம் ஒதுக்கப்படும்.
சம்பளம்
இந்த வேலையில் சேர்பவர்களுக்கு ஊதியம் முதல் ஆண்டில் மாதம் ரூ.29,000/-, இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.31,000/- மற்றும் சேவையின் மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.34,000/- கொடுக்கப்படும்.
எப்படி விண்ணப்பம் செய்வது..?
முதலில் ஐடிபிஐயின் அதிகாரப்பூர்வ (https://www.idbibank.in/) இணையதளத்தைப் பார்வையிடவும்.
முகப்புப் பக்கத்தில், தொழில்கள் என்பதைக் கிளிக் செய்யவும் (பக்கத்தின் கடைசிப் பகுதிக்கு உருட்டவும்). அதில்
வேலை வாய்ப்புகள் பக்கத்தில் – “ஒப்பந்தம்-2023 இல் நிர்வாகிகளின் ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக் செய்யவும்.
பின் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும், நீங்கள் புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
இப்போது “புதிய பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்” என்பதைக் கிளிக் செய்து, உங்களின் தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி விவரங்களை உள்ளிடவும். இப்போது, நீங்கள் புகைப்படம், கையொப்பம், கட்டைவிரல் பதிவு, கையால் எழுதப்பட்ட அறிவிப்பு மற்றும் எழுதுபவரின் அறிவிப்பு (எழுத்தாளர் தேர்வு செய்தால்) பதிவேற்ற தொடரலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க விண்ணப்பப் படிவக் கட்டணத்தைச் செலுத்தவும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த வேலையில் சேர உங்களுக்கு விருப்பமும் தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என்றால் வரும் ஜூன் 7-ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி தேதி. அறிவிப்பு வெளியானது நேற்று அதாவது 24-ஆம் தேதி தான். மேலும், இதில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வரும் ஜூலை மாதம் 2-ஆம் தேதி ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.