Cricket
இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ கம்பீர்.. அஸ்வின்
இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் 10 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆயத்தமாகி வருகிறார். அடுத்த மாதம் துவங்க இருக்கும் வங்கதேசம் தொடரில் டெஸ்ட் சீசன் துவங்குகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் அஸ்வின் முதல் முறையாக அணியில் விளையாடுவார் என்ற நிலையில், கம்பீர் பற்றி அஸ்வின் பேசியுள்ளார்.
“நான் மிக நல்ல முறையில் நட்புறவு கொண்டவர்களில் கவுதம் கம்பீரும் ஒருவர். அவர் மிகவும் வெளிப்படையானவர், நேர்மையான மனிதர். நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டிய நபர்களில் கவுதம் கம்பீர் குறிப்பிடத்தக்க ஒருத்தர். அவர் இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ,” என்று அஸ்வின் தெரிவித்தார்.
இதோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீருடன் போட்டியிட்டவரும், இந்திய கிரிக்கெட்டில் நன்மதிப்பு மிக்கவருமான WV ராமன் பற்றி அஸ்வின் கருத்து தெரிவித்தார்.
“மக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முழுக்க அவர்கள் உங்களுக்கு வழிகாட்ட முடியாது. நீங்கள் எப்போதும் புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவராக இருப்பது அவசியம் ஆகும். WV ராமன் என்னை வெளிப்படுத்த முழு சுதந்திரம் கொடுத்தார்.”
“எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்க அனுமதித்தார். அவர் எந்த பாதையில், எப்படி பயணிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார், ஆனால் நான் எங்கு பயணிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் என்னிடம் கூறியதே இல்லை. என்னை பொருத்தவரை ஆரம்பக்காலத்தில் WV ராமன், நான் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்,” என்று தெரிவித்தார்.