Connect with us

tech news

என்னங்க சொல்றீங்க, Repair செய்ய முடியாதா? சாம்சங் இத சொல்லலயே..!

Published

on

சாம்சங் கேலக்ஸி ரிங் மாடல் பற்றி பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி பயனர் உடல்நல விவரங்களை கச்சிதமாக டிராக் செய்து தெரிவிக்கும் கேலக்ஸி ரிங் சாதனத்தை எளிதில் சரி செய்ய முடியாது என்று கூறப்படுகிறது. கேலக்ஸி ரிங் சாதனம் டிசைன் செய்யப்பட்ட விதம் தான் இதற்கு காரணம் ன்று கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி ரிங் சானத்தை கழற்ற அதனை உள்புறத்தில் இருந்து திறக்க வேண்டுமாம். அதன்படி சாதனத்தை கழற்ற முயற்சித்தால் அதன் உள்புறம் வைக்கப்பட்டு இருக்கும் சர்கியூட் போர்டு சேதமடைந்து, அதனை பயனற்ற ஒன்றாக மாற்றிவிடுமாம்.

இது குறித்து ஐஃபிக்சிட் (iFixit) வெளியிட்டுள்ள தகவல்களில் கேலக்ஸி ரிங் சாதனத்தின் பேட்டரி தான், அதனை சரிசெய்ய முடியாத ஒன்றாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியை 400 சைக்கிள்கள் வரை பயன்படுத்த முடியும். அதன்பிறகு பேட்டரி ஆயுள் தீர்ந்து போகும் பட்சத்தில், கேலக்ஸி ரிங் சாதனத்தை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

கேலக்ஸி ரிங் சாதனத்தில் உள்ள பேட்டரியை கழற்றுவதற்கு, சாதனத்தை நிச்சயம் உடைத்தே ஆக வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்த பிறகு, மீண்டும் சாதனத்தை பயன்படுத்த முடியாது. இந்த சாதனத்தின் உள்புறத்தில் எபோக்ஸி ரெசின் கோட்டிங் செய்யப்பட்டு உள்ளது. இதன் உள்புறம் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

இந்த சாதனத்தின் சர்கியூட் போர்டு பேட்டரியுடன் பிரஸ் கனெக்டர் மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பேட்டரி மற்றும் சர்கியூட் போர்டை சால்டர் இன்றி பிரிக்க முடியும். சோல்டர் செய்யும் அளவுக்கு இடமில்லாத சமயங்களில் பாகங்களை ஒன்றிணைக்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. எனினும், சர்கியூட் போர்டை தொடுவதற்கே சாதனத்தின் பேட்டரியை சேதப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் டியர்டவுன் விவரங்களின் படி கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் சாதனத்தை சரி செய்வது, பேட்டரியை மாற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரியவந்துள்ளது.

google news