tech news
பங்கம் செய்யும் புது பவர்பேங்க் மாடல்கள் – சியோமி அறிமுகம்..!
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பவர் பேங்க் 4i மற்றும் பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ என இரண்டு புதிய பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ மாடல் அளவில் சிறியதாகவும், அதிக திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களில் சியோமி பவர் பேங்க் 4i மாடல் 20,000mAh திறன், பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ மாடலில் 10,000mAh திறனும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சியோமி பவர் பேங்க் 4i மாடலில் உறுதியான PC+ABS மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 33W சார்ஜிங் சப்போர்ட் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போர்ட் PD மற்றும் QC 3.0 சப்போர்ட் கொண்டுள்ளது. பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ மாடல் மெல்லிய டிசைன், எளிதில் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பவர் பேங்க் மாடல் யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் இருவழிகளில் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இதிலும் PD மற்றும் QC 3.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க்-ஐ 30W சார்ஜர் கொண்டு இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இரண்டு புதிய பவர் பேங்க் மாடல்களிலும் யுஎஸ்பி ஏ போர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் லோ-பவர் டெலிவரி மோட், ஓவர் சார்ஜிங் மற்றும் ஓவர் ஹீட் ஆவதில் இருந்து 12 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சியோமி பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ 10,000mAh மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். சியோமி பவர் பேங்க் 4i மாடல் ஜெட் பிளாக், நைட்ரோ கிரீன் மற்றும் டர்போ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,199 ஆகும். இவற்றின் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்குகிறது.