tech news
கியூட் லுக், குட்டி ப்ளிப் போன் அறிமுகம் – எந்த மாடல்?
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பார்பி போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேடெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ப்ளிப் போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த போனிற்கான டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த போன் வெளியாகி உள்ளது.
இந்த ப்ளிப் போன் மாடலில் அழைப்புகள், குறுந்தகவல் என தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. புதிய பார்பி போன் மாடல் பின்க் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் முன்புறம் வழங்கப்பட்டுள்ள ஸ்கிரீனை கண்ணாடியாகவும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹெச்எம்டி பார்பி போன் மாடலில் கழற்றி மாற்றக்கூடிய இருவகை பேக் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1992 ஆண்டின் பாரம்பரியம் மிக்க டோடலி ஹேர் பார்பி பொம்மையை தழுவிய சுழல்கள் அடங்கிய டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் வின்டேஜ் ஹார்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
பயனர்கள் இந்த மொபைல் போனை அழகுப்படுத்த ஏதுவாக ஸ்டிக்-ஆன் க்ரிஸ்டல்கள் மற்றும் அழகிய ரெட்ரோ பார்பி ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை கொண்டு பயனர்கள் பார்பி போனை மேலும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஹெச்எம்டி பார்பி போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறம் 1.77 இன்ச் ஸ்கிரீன், யுனிசாக் டி107 பிராசஸர், 64MB ரேம், 128MB மெமரி மற்றும் மெமரியை 32GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போன் எஸ்30+ ஓஎஸ், டூயல் சிம் வசதி, விஜிஏ கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஹெட்போன் ஜாக், MP3 பிளேயர், எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 1450mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் முழு சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது.
பிரிட்டனில் ஹெச்எம்டி பார்பி போன் விலை 129 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 12,085 என்றும் அமெரிக்காவில் இந்த மாடலின் விலை 129 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,825 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.