Connect with us

Cricket

கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா XI – கேப்டன் யார் தெரியுமா?

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தனது ஆல்-டைம் இந்தியா XI அணியை அறிவித்துள்ளார். இதில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் பலரது பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், கேப்டன் பொறுப்பு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதே டுவிஸ்ட் ஆக உள்ளது. இதோடு துவக்க வீரர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாாளர்களை தேர்வு செய்துள்ளதிலும் கம்பீர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தனது ஆல்-டைம் பிளேயிங் XI-ஐ கவுதம் கம்பீர் அறிவித்தார். அதில் துவக்க வீரர்களாக கம்பீர் தன்னையும், விரேந்திர சேவாக்-ஐ தேர்வு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்படும் ரோகித் சர்மாவுக்கு இந்த பட்டியலில் இடம் இல்லை.

மூன்றாவது வீரராக ராகுல் டிராவிட், நான்காவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் வரிசையில், விராட் கோலி, யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் பொறுப்பு எம்எஸ் டோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது பேட்டிங் யூனிட்டில் சவுரவ் கங்குலிக்கும் இடம் இல்லை.

சுழற்பந்து வீச்சாளர்கள் பிரிவில் அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின் உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை. வேகபந்துவீச்சாளர்கள் பிரிவில் இர்ஃபான் பதான் மற்றும் ஜாகீர் கான் இடம்பெற்றுள்ளனர். இதில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடம் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் இதுவரை விளையாடியவர்களில் தலைசிறந்த வீரராக பும்ரா விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா XI:

விரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், இர்ஃபான் பதான் மற்றும் ஜாகீர் கான்.

கம்பீர் தேர்வு செய்துள்ள ஆல்-டைம் இந்தியா XI அணிக்கு யார் கேப்டன் என்பதை அவர் தெரிவிக்காமலேயே, சூசகமாக வைத்துள்ளார்.

google news