Connect with us

latest news

காசு கேட்ட கடைக்காரர்…அடிக்கப் பாய்ந்த காவல் அதிகாரி…

Published

on

police

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே முத்தமிழ் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். மருத்துவமனை புறக்காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி புதன்கிழமை முத்தமிழின் உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார். சாப்பிட்ட உணவிற்கான பணத்தை கடையின் உரிமையாளர் கேட்ட போது, காவல் அதிகாரி காவேரி அவரை தாக்க முற்பட்டதாக சொல்லப்படுகிறது. சீருடையில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செய்த இந்த செயல் தர்மபுரி பகுதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முத்தமிழின் கடைக்கு சென்று சாப்பிடுவதை வழக்காமாக வைத்திருந்திருக்கிறார் காவேரி. சாப்பிட்டு முடித்த பின்னர், அதற்கான உரிய பணத்தை முழுவதுமாக கொடுக்காமல், மீதி பணத்தை நாளை தருகிறேன் என தொடர்ச்சியாக சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை நாலு மணிக்கு முத்தமிழின் கடைக்கு சாப்பிட சென்றிருக்கிறார் காவேரி.

சாப்பிட்டு முடித்ததும் அதற்கான தொகையையும், பழைய பாக்கியையும் கேட்டிருக்கிறார் உணவக உரிமையாளர் முத்தமிழ். முத்தமிழின் இந்த செயலால் காவல் அதிகாரி ஆத்திரமடைந்ததாக சொல்லப்படுகிறது.

Dharmapuri

Dharmapuri

பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து முத்தமிழின் மீது வீசி எறிந்ததாகவும், அதோடு மட்டுமல்லாமல் தான் காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டியும், முத்தமிழை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் சொன்னதாக கூறப்பட்டது.

காவேரி முத்தமிழின் மீது பணத்தை வீசிய காட்சியும், காலில் அணிந்திருந்த ஷூவை காட்டி மிரட்டியதும் உணவகத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவின் வாயிலாக கண்டறியப்பட்டது. பணியிலிருந்த போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி செய்த இந்த செயல், இது பற்றி கேள்விப்பட்ட பலரையும் பதற வைத்துள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது செய்தியாகவும், வலைதள பகிர்வாகவும் வலம் வரத்துவங்கியுள்ளது. உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

google news