Connect with us

latest news

விஜய்க்கு வாழ்த்து…ஸ்டாலினுக்கு தாக்கு…பிரேமலதா அதிரடி…

Published

on

Premalatha Vijay

செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலைமச்சர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள “தி கோட்” படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசியிருக்கிறார். அதே போல் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி தருவதில் திமுகவிற்கு என்ன பிரச்சனை இருக்கிறது? எனவும் கேட்டுள்ளார்.

தமிழக முதலைமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ள அமெரிக்க சுற்றுப்பயணத்தில் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகள் முன் நின்று போட்டோக்கள் எடுக்கிறார். எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர்?, இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன? எனத் தெரியவில்லை என சொன்னார்.

CM Stalin

CM Stalin

மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனுமில்லை, அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனம். அவற்றிற்கு மாற்றாக தமிழகத்திலேயே அணைகட்ட வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.

பேட்டியின் போது,விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “தி கோட்” படம் வெற்றியடைய தான் வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் திமுகவிற்கு என்ன பிரச்சனை? என கேட்டார்.

கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் நீதிமன்றத்தில் அனுமதி வாங்க முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என அரசை கடுமையாக சாடினார்.

அதே போல யார் வளர்ச்சியையும், யாரும் தடுக்க முடியாது என்றார். முதலமைச்சர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னர் தமிழ் நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும்.

கார் ரேஸ் நடத்த ஐந்தாயிரம் கோடி செலவளிக்கப்பட்டது. இந்த பணத்தை கொண்டு தமிழகம் முழுவதும் தரமான தார்சாலைகளை அமைத்திருக்கலாம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாமே என்றும் முதலைமச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார் பிரேமலதா விஜயகாந்த்.

google news