latest news
ஆசிரியருக்கு பாராட்டு…நிர்வாகத்திற்கு அறிவுறை…அமைச்சர் செய்த அதிரடி செயல்…
சென்னை அஷோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பிற்போக்கு கருத்துக்களை பேசியதாக எழுந்தள்ள குற்றச்சாட்டு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. முன் ஜென்ம பாவங்களால் தான் இந்த ஜென்மத்தில் அழகில்லாத பிறவியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற பேச்சிற்கு, மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த பள்ளி ஆசிரியரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியுள்ளார்.
சென்னை அசோக் நகர் பள்ளியில் மோட்டிவேசன் ஸ்பீக்கர் மகா விஷ்ணு என்பவர் பேசிய விஷயங்களும், அதற்கு கிளம்பிய எதிர்ப்பும் தான் தமிழகத்தின் முக்கியமான பேசும் பொருளாக மாறியுள்ளது.
மந்திரங்கள் ஜெபித்தால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்றும், முன் ஜென்மத்தில் செய்யப்பட்ட பாவங்களில் விளைவாகத் தான் இந்த பிறவியில் அழகில்லாத பிறவி ஏற்படுகிறது என பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியிருந்தார். இதற்கு அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் பார்வைத்திறன் மாற்றுத்திரனாளி ஆசிரியர் சங்கர் மேடையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பிற்போக்கு சிந்தனைகளை உருவாக்கக்கூடிய கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சொன்னார்.
மேடையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியரை பாராட்டுவதாகவும், அதே நேரத்தில் இது போன்ற பேச்சாளர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்த பிறகே அவர்களை மேடைகளில் பேச அனுமதிக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ள நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளுவர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அனைத்து வகையான மாற்றுத்திரனாளிகள் சங்கத்தினர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்துள்ளனர்.