Cricket
147 ஆண்டுகளில் முதல்முறை.. இங்கிலாந்து வீரர் வேற லெவல் சாதனை..!
இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் சர்வதேச கிரிக்கெட்டில் வேற லெவல் சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.
இதில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் டக்கெட் 86 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஒல்லி போப் நிதானமாக ஆடி சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒல்லி போப் 103 ரன்களை அடித்து, களத்தில் உள்ளார்.
நேற்றைய போட்டியில் ஒல்லி போப் அடித்தது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது. 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் தனது முதல் ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்தது இதுவே முதல் முறை ஆகும்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (86), டான் லாரென்ஸ் (5) மற்றும் ஜோ ரூட் (13) ஆகியோரது விக்கெட்டுகளை பறிக் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஜோ ரூட் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.