tech news
ஆன்லைனில் நிமிடங்களில் பான் கார்டு Apply பண்ணலாம்.. எப்படி தெரியுமா?
இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகள் பயன்படுத்துவது, வரி செலுத்துவது என பல விஷயங்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது தான் பான் கார்டு. பான் கார்டு எண் கொண்டு வருமான வரித்துறை தனிநபர்களை அடையாளம் காண்கிறது. இதைக் கொண்டு ஒவ்வொருத்தர் எவ்வளவு வரி செலுத்துகின்றனர் மற்றும் பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
வருமான வரித்துறையால் விநியோகம் செய்யப்படும் பான் கார்டு மொத்தம் பத்து இலக்க எண்-வார்த்தைகள் கொண்டுள்ளது. இது ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட அடையாளத்தை வழங்குகிறது. பான் கார்டில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தையின் பெயர் மற்றும் கையெழுத்து மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பான் எண் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் என்ன?
- முதலில் பயனர்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு (https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html) செல்ல வேண்டும்.
- இந்த வலைப்பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
- விவரங்களை சரியாக பதிவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இனி பான் கார்டு விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
- பான் கார்டு விண்ணப்பிக்கும் கட்டணத்தை ஆன்லைன் மற்றும் டிமான்ட் டிராஃப்ட் வடிவில் செலுத்த முடியும்.
- கட்டணத்தை வெற்றிகரமாக செலுத்தியதும், உங்களது விண்ணப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.
- அந்த தகவலில் உங்களுக்கென விண்ணப்ப எண் இடம்பெற்று இருக்கும்.
- இனி ஆதார் ஓடிபி பதிவிட்டு உங்களது விண்ணப்பத்தை இ-கையெழுத்திட வேண்டும். இதை செய்ய முடியவில்லை எனில் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை தபால் மூலம் வருாமன வரித்துறை அலுவலகத்திற்கு அனுப்பலாம். இத்துடன் அதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த வழிமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடித்த பிறகு- பான் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கான பான் எண் உருவாக்கப்பட்டு விடும்.
இதன் பிறகு உங்களது பான் கார்டு 15 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும்.