Connect with us

Finance

வீக் என்டில் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை…விட்டுக்கொடுக்காத வெள்ளியும்…

Published

on

Gold

செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்தே தங்கத்தின் விலையானது பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளாமல் இருந்து வந்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அதே விலையில் விற்கப்பட்டு வந்தது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம். இந்நிலையில் நேற்றைய தினம் விற்பனை விலையில் சிறிய மாற்றத்தை சந்தித்திருந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை.

சர்வதேச பொருளாதார் நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றைக் கொண்டு தான் தங்கத்தின் விற்பனை விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கம் விலையில் நிலையில்லாத தன்மை இருந்தும் வருகிறது.

இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் தங்கத்தின் விற்பனை விலையிலும், வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நேற்றை விட இன்று கிராம் ஒன்றிற்கு நாற்பது ரூபாய் (ரூ.40/-) குறைந்துள்ளது தங்கம். ஆறாயிரத்து அறனூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.6,680/-) விற்கப்பட்டு வருகிறது ஒரு கிராம் தங்கம்.

jewel

jewel

இதனால் சவரன் ஒன்றிற்கான விலை நேற்றைவிட முன்னூற்றி இருபது ரூபாய் குறைந்துள்ளது. இன்று விற்பனனயாகி வரும் ஒரு சவரன் தங்கத்தின் சென்னை விலை ஐம்பத்தி மூன்றாயிரத்து நானூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.53,440/-) உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் நேற்றை விட இன்று கிராம் ஒன்றிற்கு இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள் ( ரூ.2.50காசுகள்) குறைந்து விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று என்பத்தி ஒன்பது ரூபாய் ஐம்பது காசாகவும் (ரூ.89.50/-), ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரத்து ஐனூறு ரூபாய்க்கு (ரூ. 89,500/-)விற்கப்பட்டு வருகிறது இன்று.

google news