latest news
இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல் – கேலக்ஸி S23 FE வெளியீடு எப்போ தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE வெளியீடு இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் நடைபெறும் என்று அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 FE மாடலை சற்று முன்னதாகவே அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் விற்பனை துவங்கியது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறாத நிலையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டை முன்கூட்டிய நடத்த திட்டமிடலாம் என்று தெரிகிறது. மே மாத நிலவரப்படி கேலக்ஸி S23 விற்பனை கணிசமாக குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டதுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கேலக்ஸி S23 சீரிஸ் விற்பனை 20 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க அதிக ஆர்வம் காட்டுவோர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை மார்ச் மாதத்திற்குள் வாங்கிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வெகுஜன மக்கள் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை வாங்க அதிக ஆர்வம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களுக்கு முன்னதாகவே கேலக்ஸி S23 FE மாடலை அறிமுகம் செய்யலாம்.
சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல், கேலக்ஸி S23-ஐ விட குறைந்த விலை கொண்ட வேரியண்ட் ஆகும். இரு மாடல்களின் அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், இதனை சந்தை வெளியீட்டுக்கு தயார்படுத்த அதிக நேரம் ஆகாது என்றே தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED ஸ்கிரீன், சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்சைனோஸ் 2200 பிராசஸர், 6 ஜி.பி./ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS சப்போர்ட் வழங்கப்படுகிறது.