Connect with us

Cricket

பசங்க கடுப்புல இருக்காங்க, ஆனா பரவாயில்ல.. ஸ்காட்லாந்து பயிற்சியாளர் தடாலடி..!

Published

on

ஸ்காட்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி தொடரை ஓயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது.

இந்த தொடரின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக ஆஸ்திரேலியா அணி தயார்படுத்திக் கொண்டது. இதனிடையே ஸ்காட்லாந்து பயிற்சியாளர் டௌக் வாட்சன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த தொடர் எங்களது வீரர்களுக்கும் கடுமையான ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும், இதில் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன.

“தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. வீரர்கள் ஏமாற்றம் அடைந்த போதிலும், அவர்கள் பெருமையாக உள்ளனர். இதன் மூலம் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலகத் தரம் வாய்ந்த எதிரணியுடன் விளையாடுகிறோம் என்று எங்களுக்கு தெரியும்.”

“பேட்டிங் விஷயம் முழுமையாக பார்ட்னர்ஷிப்களை சார்ந்தது ஆகும். அனைத்து போட்டிகளிலும் எங்களால் 40 ரன் பார்ட்னர்ஷிப் கூட எடுக்க முடியவில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டோம், அதை நாங்கள் அதிகளவு செய்தது இல்லை. நாங்கள் வீரர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டோம். இதனால் அவர்கள் இந்த அளவுக்கு போட்டியிட்டனர்,” என்று ஸ்காட்லாந்து பயிற்சியாளர் டௌக் வாட்சன் தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *