Connect with us

tech news

இதை செஞ்சாலே போதும்.. மொபைல் டேட்டா வேகம் பிச்சிக்கும்..!

Published

on

ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் தனியே பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்து விட்டன. இப்படியிருக்க மொபைலில் நெட் வேகம் கொஞ்சம் குறைந்தாலும், அதை யாராலும் பொருத்துக் கொள்ள முடியாது. வீடியோ ஸ்டிரீமிங், சமூக வலைதளம் அல்லது அலுவல் பணி என எல்லாவற்றுக்கும் இணையம் அத்தியாசியமாகி விட்டதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மொபைல் நெட் வேகம் அடிக்கடி குறைவது, எப்போதும் குறைவாகவே இருப்பதாக உணர்ந்தால், அதனை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:

முதலில் மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மொபைலில் ஏற்படும் மென்பொருள் கோளாறுகள் சரியாகி இணைய வேகம் அதிகரிக்கும். மொபைல் ரீ-ஸ்டார்ட் ஆகும் போது மென்பொருள் ரிஃப்ரெஷ் ஆவதால் இணைய வேகம் அதிகரிக்கும்.

சமயங்களில் மென்பொருள் அப்டேட் செய்யாதது கூட இணைய வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இதனால், தொடர்ச்சியாக மென்பொருள் அப்டேட் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், மொபைல் இண்டர்நெட் வேகம் குறையும் போது, மொபைலை அப்டேட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இணைய வேகம் தானாக அதிகரிக்கும்.

மொபைலில் பேக்கிரவுண்ட் ஆப்ஸ் இயங்கி வந்தால் கூட மொபைல் இண்டர்நெட் வேகம் குறையும். இதனால் இண்டர்நெட் வேகம் குறையும் போது, பேக்கிரவுண்ட் ஆப்ஸ் இயங்குவதை தடுத்து நிறுத்தவும். இவ்வாறு செய்தால் இணைய வேகம் தானாக அதிகரிக்கும்.

மொபைலில் இணைய வேகம் குறைந்தால், வைபை, மற்ற நெட்வொர்க் என வேறு நெட்வொர்க்குகளில் இணைத்து பார்க்கலாம். இவ்வாறு செய்யும் போது, இணைய வேகம் குறைவாக இருக்கிறதா அல்லது வேறு ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.

உங்களது மொபைல் போனின் செயலிகளில் இருந்து நாளடைவில் தகவல்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். இவைகூட இணைய வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இதனை சரி செய்ய கேச்சி மற்றும் குக்கீஸ்-களை அழிக்கலாம். இவ்வாறு செய்ய மொபைல் போனின் Settings > Apps & notifications > See all apps ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதில் ஒரு app-ஐ க்ளிக் செய்து Storage & cache > Clear cache and Clear storage ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

google news