automobile
ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உருவாக்கும் கே.டி.எம்.
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கும் நிலையிலும், ஐ.சி. எஞ்சின் சார்ந்த மோட்டார்சைக்கிள் பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. அந்த வரிசையில், கே.டி.எம். நிறுவனம் 1301சிசி LC8 V-டுவின் எஞ்சினுக்காக ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த எஞ்சின் கே.டி.எம். நிறுவனத்தின் டூரிங் சார்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களான கே.டி.எம். 1290 சூப்பர் அட்வென்ச்சர் S/R மற்றும் கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் GT போன்ற மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் 2024 அல்லது 2025 வெர்ஷன்களும் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
வாகனம் ஓட்டுவோருக்கு அதிக கண்ட்ரோல் வழங்குவது மேனுவல் கியர்பாக்ஸ் தான் என்ற போதிலும், ஆட்டோமேடிக் கியர்பாக்சிலும் அதற்கான பலன்கள் உண்டு. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தும் போது ரைடிங்கில் அதிக கவனம் செலுத்த முடியும். இது கியர் மாற்ற தனி கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூலம், கே.டி.எம். நிறுவனம் தனது போட்டி நிறுவன மாடல்களை எளிதில் எதிர்கொள்ள செய்யும். ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே DCT சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் மட்டும் ஹோண்டா நிறுவனம் DCT கியர்பாக்ஸ் கொண்ட இரண்டு லட்சம் மோட்டார்சைக்கிள் மாடல்களை இதுவரை விற்பனை செய்து இருக்கிறதகு.
ஹோண்டா நிறுவனத்தின் DCT சிஸ்டம், மேம்பட்ட எலெக்டிரானிக் மற்றும் ஹைட்ராசிக் சிஸ்டம்களை கொண்டுள்ளன. இதில் உள்ள கிளட்ச் மற்றும் ஷிஃப்டர் உள்ளிட்டவைகளை வழக்கமான முறையில் இயக்க முடியாது. கே.டி.எம். நிறுவனத்தின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இதுவிட சற்றே எளிய வழிமுறை கொண்டிருக்கிறது.
கே.டி.எம். ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்-இல் சென்ட்ரிஃபுகல் கிளட்ச் உள்ளது. இது எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனை இணைக்கிறது. இது எம்.வி. அகுஸ்டா பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் கிளட்ச் சிஸ்டத்தை (SCS)-ஐ விட வித்தியாசமானது ஆகும். கே.டி.எம். ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கிளட்ச் லீவர் பயன்படுத்தாமலேயே ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆகும் வசதி கொண்டிருக்கிறது.
Source: motorcyclenews