Connect with us

latest news

அவங்களுக்கு சின்னம் வாங்கிக் கொடுத்தே அதிமுக தான்…வெளுத்து வாங்கிய வேலுமணி…

Published

on

Velumani

திராவிட முன்னேற்றக் கழகத்தினை எதிர்க்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் 2019 தேர்ததலில் கூட்டணியமைத்து போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையிலும் இந்த இரு கட்சிகளும் 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியமைத்தே தேர்தலே எதிர்கொண்டன. அதன் பின்னர் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியை தொடர்ந்தது.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த இரு கட்சிகள் ஒரு வரை ஒருவர் குற்றம் சாட்டி பேசி வரத்துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு களம் கண்டன. அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் அடிக்கடி வார்த்தை போர் நடந்து வருகிறது.

கோயம்பத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

நல்ல கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் வாழ்வு கொடுத்தது ஜெயலலிதா தான் என பேசினார். இதனால் தான் பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவும், அக்கட்சிக்கு அமைச்சர்கள் தமிழகத்திலிருந்து கிடைக்க வைத்தது ஜெயலலிதா தான் என்றார்.

Annamalai

Annamalai

அதே போல பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது ஜெயலலிதாவும், அதிமுகவும் தான் எனச் சொன்னார்.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதற்காக தங்களது வாக்கினை செலுத்தினோம் என மக்கள் சிந்தித்து வருவதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை ஃபேஸ்-புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களிலேயே அரசியல் நடத்தி வருவதாக கடுமையாக பாஜகவை கடுமையாக  சாடி இருந்தார்.

google news