Connect with us

Cricket

போட்டியில் பங்கமா கலாய்ச்சாங்க, ஏன் கேட்டதுக்கு இதைத்தான் சொன்னாங்க.. துருவ் ஜூரெல் ஓபன் டாக்

Published

on

இந்திய அணியின் விக்கெட்கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் தான் ஜூரெல் இந்திய ஜெர்சியில் களமிறங்கி விளையாடினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து சமீபத்தில் பேசிய துருவ் ஜூரெல், தான் எதிரணி வீரர்களால் ஸ்லெட்ஜிங் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய அணி குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்த நிலையில், களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்த போது எதிரணி வீரர்கள் தன்னை கோபமூட்டும் வகையில் பேசியதாக தெரிவித்தார்.

“அந்த நாள் இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் 30 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழக்காமல் இருந்தேன். மேலும் அடுத்த நாள் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு வந்தேன். பழைய பந்தில் அரைசதம் கடப்பதா அல்லது புதிய பந்து வரும் வரை நிதானமாக விளையாட வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், அவர்கள் புதிய பந்தை எடுப்பதற்குள் நான் 36 ரன்களை எடுத்திருந்தேன். அதன்பிறகு தான் ஆன்டர்சன் மீண்டும் பந்துவீச வந்தார்.”

“ஜோ ரூட் மிக ஆக்ரோஷமாக இருந்தார், மேலும் தொடர்ச்சியாக ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். அவர்கள் பிரிடிஷ் மொழியில் பேசி வந்தனர். இதனால், அவர்கள் பேசியதில் பல வார்த்தைகள் எனக்கு புரயவும் இல்லை. இவருடன் பேர்ஸ்டோவும் இணைந்து கொண்டார். ஐபிஎல்-இல் என்னுடன் விளையாடியவர் என்பதால், ஜோ ரூட் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”

“நீங்களும் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று ஜோ ரூட்-இடம் கேட்டேன். அதற்கு அவர், தற்போது நாம் அனைவரும் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்று பதில் அளித்தார்,” என்று துருவ் ஜூரெல் தெரிவித்தார்.

google news