Connect with us

Cricket

ஐபிஎல் 2025 தொடர்பான முக்கிய அறிவிப்பு.. தொடர்ந்து தள்ளிப்போடும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?

Published

on

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது. எனினும், இந்த தொடரில ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும்? அதில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. ஐபிஎல் 2025-க்கான ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

வீரர்களை தக்கவைப்பது தொடர்பான தகவல்களை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ அறிவிக்கும் என்று கூறப்பட்டது. எனினும், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக மேலும் காலதாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கு ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் நவம்பர் 15 ஆம் தேதி வரை அவகசாம் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஐபிஎல் தொடரில் இருந்துவந்த விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “வீரர்களை தக்க வைப்பு தொடர்பாக நீக்கப்பட்ட பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவர சிஎஸ்கே சார்பில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை,” என்று பதில் அளி்த்தார்.

ஏற்கனவே இது தொடர்பான விதிகளின் படி, ஐபிஎல் தொடரில் ஓய்வை அறவித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அன்கேப்டு பிரிவில் அணியில் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்துவந்தது. எனினும், 2021 ஐபிஎல் தொடரில் இருந்து இந்த விதிமுறை நீக்கப்பட்டுவிட்டது. அதன்படி, இந்த விதிமுறையை மீண்டும் கொண்டுவர சிஎஸ்கே விரும்புவதாகவும், இது தொடர்பான கோரிக்கைகளை சிஎஸ்கே சார்பில் பிசிசிஐ-இடம் முன்வைக்கப்பட்டதாக ஏராளமான தகவல்கள் வெளியாகின.

இந்த விதிமுறையின் கீழ் சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனியை மிகக் குறைந்த விலையில், தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், சிஎஸ்கே இத்தகைய கோரிக்கையை வைத்திருக்கும் என்று கூறப்பட்டது. எனினும், இவை அனைத்திற்கும் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி முற்றுப்புள்ளி வைத்தார்.

google news