Connect with us

latest news

ஓய்வூதியம் வாங்குறீங்களா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க!

Published

on

ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்ந்து அதனை வாங்க அரசிடம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழந்தவர்கள் பெயரில் பயன் பெறுவது மற்றும் இதர முறைகேடுகளை தடுக்க முடியும். இதன் பொருட்டு ஓய்வூதியம் பெறுவோர், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.

வயதில் மூத்தவர்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு சிரமம் கொள்ளக்கூடாது, அவர்களுக்கு எளிதில் ஆயுள் சான்று கிடைப்பதை வழிவகை செய்யும் நோக்கில், மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஆகியவை அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளன. இது தொடர்பான அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர்கள் நலச் சங்கங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம்களை ஓய்வூதியர் நலத்துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்ரின் மூலம் 1.45 கோடி ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.

இதே வரிசையில், இந்த ஆண்டும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 1 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இதனை ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த முகாம்கள் நாடு முழுக்க முக்கிய நகரங்கள், மாவட்ட தலைமையகங்களில் நடைபெற இருக்கிறது. இதோடு ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நல சங்கங்கள், தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவை 157 நகரங்களில் இந்த முகாமை நடத்த உள்ளன.

google news