Cricket
ODI வரலாற்றில் முதல் முறை.. இந்திய வம்சாவளி வீரர் சூப்பர் சாதனை..!
இந்தியாவில் பிறந்து வளர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் மிலிந்த் குமார் தன் பெயரில் மற்றொரு உலக சாதனையை சேர்த்துக் கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இவர் தற்போது படைத்துள்ள சாதனையை இதுவரை வேறு யாரும் படைத்ததே இல்லை. அப்படி இவர் என்ன சாதனை படைத்தார், எதனால் அது ஸ்பெஷல் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் மிலிந்த் குமார், சமீபத்திய போட்டி ஒன்றில் 155 ரன்களை விளாசியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் பேட் செய்த மிலிந்த் குமார் 110 பந்துகளில் 155 ரன்களை அடித்தது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனையாக அமைந்துள்ளது. இவர் அடித்துள்ள 155 ரன்களை இதுவரை எந்த வீரரும் அடித்ததே இல்லையாம்.
சரியாக சொல்லப் போனால் ஒருநாள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 69 முறை வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் 150 முதல் 159 ரன்கள் வரையிலான ரன்களை அடித்துள்ளனர். எனினும், தற்போது மிலிந்த் குமார் அடித்துள்ள 155 ரன்களை இதுவரை எந்த வீரரும் அடித்தது இல்லை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் சரியாக 155 ரன்களை அடித்தது இதுவே முதல் முறை ஆகும்.
1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த 53 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4773 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இத்தனை போட்டிகளில் ஒரு வீரர் கூட இதுவரை சரியாக 155 ரன்களை அடிக்கவில்லை.
முதல் தர கிரிக்கெட்டில் மிலிந்த் குமார் சராசரி கிட்டத்தட்ட 50 ஆக உள்ளது. இதில் இவர் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இந்தியாவில் டெல்லி மற்றும் சிக்கிம் அணிகளுக்காக இவர் ரஞ்சி கோப்பையில் விளையாடி இருக்கிறார். 2018-19 ரஞ்சி தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக மிலிந்த் குமார் (1331) உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.
இதுதவிர மிலிந்த் குமார் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 33 வயதான மிலிந்த் குமார் தற்போது அமெரிக்க தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.