Connect with us

Cricket

டிராவிட் – கம்பீர்.. வித்தியாசம் இதுதான்.. என்ன அஷ்வின் இப்படி சொல்லிட்டாரு..?

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இந்திய அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் மிக்கவருமான ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து பயிற்சியாளர் பதவியை ஏற்றுள்ள கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில் இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டது.

தற்போது தான் பணியை துவங்கியுள்ளார் என்ற போதிலும், கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில் இந்திய அணி வெற்றி, தோல்விகளை சந்தித்து முன்னணியில் பயணத்தை தொடர்கிறது. தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதன்பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டில் அந்நாட்டு அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணியின் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின் அணிக்கு பக்கபலமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களில் ராகுல் டிராவிட் மற்றும் கவுதம் கம்பீர் என இருவருக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஷ்வின், “கம்பீர் மிகவும் நிதானமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒன்றுமில்லை. காலை பயிறிச்யில் ‘வருகிறீர்களா?’ என்பது போல கேட்பார். ராகுல் பாய் என்றால், நாம் வருவோம். நாங்கள் வந்தவுடன், பாட்டில்கள் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அவருக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும். அவர் போல, எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும், அவரைப் பொறுத்தவரை. அவருக்கென ஒரு நிதான செயல்பாடு உள்ளது. அவர் மற்றவர் மனதைக் புரிந்து கொள்வதாக நான் உணர்கிறேன். அவர் அணியினரை நேசிக்கிறார்,” என்றார்.

google news