latest news
செந்தில் பாலாஜி ஜாமீனின் விடுவிப்பு…ஸ்டாலின் மகிழ்ச்சி…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நானூற்றி எழுபத்தி ஓரு நாட்களுக்கு பிறகு ஜாமீனில் இன்று வெளி வர இருக்கிறார். சட்ட விரோத பணப்பறிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உச்ச நீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை திமுக தொண்டர்களும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கிறார்.
ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வரவேற்பினை பதிவிட்டுள்ளார்.
அதில் கைது செய்து சிறையிலேயே வைக்கப்பட்டதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள், முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையிலிருந்து வெளியே வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்பதாக சொல்லியிருக்கிறார். எமர்ஜென்ஸி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழக்கை கிடையாது, அரசியல் சதிகளால் பதினைந்து மாதங்கள் தொடர்ந்தன. உன் தியாகம் பெரிது அதனினும் உறுதி பெரிது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில் அதற்கு உச்ச நீதி மன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது என்றும் தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையிலிருந்து வெளிவர உள்ள நிலையில் கரூரில் கொண்டாட்டங்கள் கலைகட்டி வருகிறது. சிறையிலிருந்து இன்று மாலைக்குள் செந்தில பாலாஜி வெளியே வருவார் என சொல்லப்படுகிறது.