Connect with us

automobile

ஹீரோ-ஹார்லி கூட்டணியில் உருவான முதல் பைக் – ஹார்லி டேவிட்சன் X440 அறிமுகம்

Published

on

harley davidson x 440

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மேட்-இன்-இந்தியா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. X440 என்று அழைக்கப்படும் புதிய ரோட்ஸ்டர் மாடல் ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் இடையேயான கூட்டணியில் உருவாகி இருக்கும் முதல் மோட்டார்சைக்கிள் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பழைய காலத்து XR ரோட்ஸ்டர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் ஃபிலாட் ஹேண்டில்பார், நியூட்ரல் எர்கோனாமிக்ஸ் மற்றும் பட்ச் டிசைன் கொண்டுள்ளது. இந்த மாடலின் முதல் புகைப்படம் வெளியானது முதல் தற்போது அறிமுகமாகி இருக்கும் மோட்டார்சைக்கிளில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் 440சிசி, ஆயில்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

harley-davidson-x-440

harley-davidson-x-440

வழக்கமாக குரூயிசர் மாடல்களில் வழங்கப்படும் முன்புற ஃபூட்பெக் (footpeg), ஸ்வெப்ட்-பேக் (Sweptback) ஹேண்டில்பார் உள்ளிட்டவை இந்த மாடலில் வழங்கப்படவில்லை. மாறாக ஃபூட்பெக் மோட்டார்சைக்கிளின் நடுவே பொருத்தப்பட்டு, ஃபிலாட் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய X440 மாடலில் எம்.ஆர்.எஃப். டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்தில் இது பைரெளி ஃபேண்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் போன்றே காட்சியளிக்கிறது.

இந்த மாடலின் முன்புறம் 18 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் வீல் வழங்கப்பட்டு உள்ளது. இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் கண்ணாடிகள் (மிரர்) உள்ளன. டெயில் லேம்ப் மட்டும் ஓவல் வடிவம் கொண்டிருக்கிறது. ஹெட்லைட்டில் எல்.இ.டி. டி.ஆர்.எல். பார் நடுவே உள்ளது. இண்டிகேட்டர்களின் நடுவில் ஹார்லி டேவிட்சன் லோகோ பொருத்தப்பட்டு உள்ளது.

harley-davidson-x-440

harley-davidson-x-440

ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் டியுபுலர் ஃபிரேம், சிங்கில் டவுன்-டியூப் டிசைன் கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் சிங்கில் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் இந்திய வெளியீடு ஜூலை மாத வாக்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *