Cricket
ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.
“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.