Connect with us

latest news

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

Published

on

Anbarasan udhayanidhi

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அன்மையில் அமெரிக்க சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் வெளிநாடு செல்லும் முன்னரே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தமிழக நாளிதழ் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களானது நாளை நடைபெறும் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முக்கிய அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Stalin

Stalin

சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு பற்றியும்  சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என உறுதி பட சொல்லியிருந்தார்.

பத்து நாட்களுக்குள் இது நடந்தே தீரும் என அமைச்சர் அன்பரசன் சொல்லியிருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறித்த செய்தியை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதனால் திராவிட முன்னேற்றக கழகத்தினரிடையே உதய நிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா? என்ற ஆவல் மேலோங்கியுள்ளதாக தெரிகிறது.அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

google news