Cricket
ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் அணிகள் வீரர்களை தக்க வைத்துக் கொள்வது மற்றும் ரைட் டு மேட்ச் விதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு அணியும் ஐந்து கேப்டு வீரர்கள் அதிகபட்சம் (இந்தியா மற்றும் வெளிநாடு), அதிகபட்சம் இரண்டு அன்-கேப்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஐபிஎல் அணிகளுக்கான ஏலத் தொகை ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது மொத்த சம்பளத்தில் ஏலத் தொகை, போட்டி கட்டணம் மற்றும் வீரர்கள் செயல்பாட்டுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்டவை அடங்கும். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் மொத்த சம்பளத்தில் ஏலத்தொகை மற்றும் வீரர்கள் செயல்பாட்டுக்கான ஊக்கத்தொகை மட்டுமே இடம்பெற்று இருந்தது.
தற்போது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பெரிய ஏலத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வீரர் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற முடியாது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், ஐபிஎல் சீசன் துவங்கும் முன்பு தொடரில் இருந்து விலகுவது அல்லது தொடரில் கலந்து கொள்ள மறுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரர் அடுத்த இரண்டு சீசன்களில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. 2025-27 வரையிலான ஐபிஎல் தொடர்களில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.