Connect with us

latest news

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

Published

on

Vanathi Seenivasan

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை பொறுப்பிற்கு வர வாரிசாக இருக்க வேண்டும் என  விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுகவில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்டபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்திருக்கிறார்.

இந்த நியமனம் திமுகவின் வாரிசு அரசியலை காட்டுகிறது எனவும், திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரன உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும், பொறுப்பிற்கும், தலைமைக்கு வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் பேசும் திமுக அரசு அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது என்றார்.

திமுகவின் வாரிசு அரசியல் குறித்து மக்களிடம் பாஜக தீவரமாக எடுத்துச் செல்லும் என்றும், இந்த விஷயம் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின் போது சொல்லியிருக்கிறார்.

google news