Connect with us

Cricket

ஐபிஎல் மெகா ஏலம்.. ஹர்திக் பாண்டியாவை மற்ற அணிகள் வாங்குவது சந்தேகம் தான்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்

Published

on

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிர நிலையை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற அணியை உருவாக்குவது தொடர்பான திட்டமிடல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த முறை மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் முறை அமலில் உள்ளது.

மேலும், அன்கேப்டு வீரருக்கான விதிமுறை மற்றும் ஆர்டிஎம் கார்டு உள்ளிட்டவை மெகா ஏலத்தை சுவாரஸ்யத்தில் வைத்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியில் எந்தெந்த வீரர் தக்க வைக்கப்படலாம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மாறாக அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் பெற முயற்சிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூன்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவர்களை மீண்டும் அணியில் எடுப்பது சவாலான காரியம் ஆகிவிடும். மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஆர்டிஎம் கார்டு மூலம் அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.”

“ஹர்திக் பாண்டியாவையும் ஏலத்தில் எடுக்க முடியாது என்ற சூழல்தான் நிலவுகிறது. எனினும், அவர் அடிக்கடி காயத்தால் அவதியுறும் காரணத்தால், மற்ற அணிகள் அவரை எடுக்க ஆர்வம் செலுத்துவார்களா என்பது கேள்விக்குறியான விஷயம் தான். ஆர்டிஎம் இருக்கும் பட்சத்தில், அதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பும்ரா, பாண்டியா போன்ற வீரர்கள் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் அவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது கடினமாகிவிடும்,” என்று அஜய் ஜடேஜா தெரிவித்தார்.

google news