Connect with us

latest news

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

Published

on

Sathyaraj Periyar

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் துணை முதல் – அமைச்சராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது என பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது. அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மகளிரணியின் தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.

Udhayanidhi

Udhayanidhi

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மானமிகு, மாண்புமிகு அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

சமூகநீதி காப்பதில் சமரசமில்லா போராளியாக திகழும் உதயநிதிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில், பெரியாரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன் என்றும் தனது வீடியோ மூலமான வாழ்த்துச் செய்தியில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.  முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் சந்தானம் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் அது பத்து நாட்களுக்குள்  நடந்தே தீரும் என உறுதிபட சொல்லியிருந்தார்.

google news

latest news

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…

Published

on

Senthil Balaji

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து,  அவர் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து நானூற்றி எழுபத்தி ஓரு  நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.

ED

ED

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தது உச்ச நீதிமன்றம். வாரம் இரு நாள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுவும் நிபந்தனைகளில் ஒன்று. அதன்படி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருதார் செந்தில்பாலாஜி.

இதே போல நீதிமன்ற உத்தரவின் படி திங்கட்கிழமையான இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்றைய தினம் அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில்பாலாஜி.

அமைச்சருக்கான அரசு வாகனத்தில் வராமல் தான் பயன்படுத்தும் தான் சார்ந்த வாகனத்திலே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பன மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது, இது தொடர்பன விசாரணைக்காக செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில் வருகிற அக்டோபர் மாதம் நான்காம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிடக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் பதினான்காம் தேதிக்கு  விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அக்டோபர் மாதம் நான்காம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

google news
Continue Reading

Cricket

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

Published

on

Ind vs Ban

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.

Ind Bowling

Ind Bowling

நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.  இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.

google news
Continue Reading

latest news

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

Published

on

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ், மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை கூடுதல் விருப்பமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வெளியான தகவல்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில்) கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி இந்த திட்டத்தை அமல்படுத்த முன்மொழிந்துள்ளார்.

அதன்படி மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கலின் பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து பயன்பெற்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜ்னா நன்மைகளை மையம் விரிவுபடுத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கையானது, கிட்டத்தட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அவர்களுக்கு ஒரு தனித்துவமான அட்டை மற்றும் கூடுதல் கவரேஜ் விருப்பங்களை தற்போதைய பயனாளிகளுக்கு வழங்குகிறது.

பயனாளிகள் தங்களுக்கு இருக்கும் பலன்கள் அல்லது PM-JAY ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட மூத்த குடிமக்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் (ESIS) கீழ் வருபவர்களும் PM-JAY திட்டத்தின் பலன்களுக்குத் தகுதி பெற முடியும்.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் (CPC) ஊதிய கணக்கீடு அடிப்படையில் பங்களிப்புத் தொகை ஒன்று முதல் ஐந்து நிலைகளில் ரூ. 30,000, ஏழு முதல் 11 நிலைகளில் ரூ. 78,000 மற்றும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் ரூ. 1,20,000 ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிஸ்ரா எழுதியிருக்கும் கடிதத்தில், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு CGHS நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு முறை பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை மேற்கோள் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், மூத்த குடிமக்கள் CGHS மற்றும் AB PM-JAY இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வைப்பது நியாயமற்றது என்றும் PM-JAY மூத்த குடிமக்களுக்கு அவர்களின் நிதி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் உதவ உருவாக்கப்பட்டது என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டும் என்றும், இதற்காக தேசிய கவுன்சிலான JCM-இன் ஊழியர்கள் தரப்புடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

google news
Continue Reading

Finance

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

Published

on

Gold

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.

கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.

Silver and Gold

Silver and Gold

ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.

கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.

 

 

 

google news
Continue Reading

latest news

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

Published

on

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை, நிலம் எங்கு அமைந்துள்ளது உள்பட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

தமிழகத்தில் வருவாய் துறை சார்ந்த ஆவணங்களை பெற அதிக கால தாமதம் ஏற்டுவது, வருவாய் துறைக்கு மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளும் தாமதமாகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், வருவாய் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறும் போது, “தமிழ்நாடு அரசின் வருவாய் துறை இயக்குநரின் உத்தரவுப்படி வருவாய்த் துறை சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். இதனை நிறைவேற்ற கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.”

“உத்தரவின் படி ஆன்லைனில் விண்ணப்பம் அப்லோடு செய்த நாளில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் அது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, மக்களுக்கு ஆவணங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு உரிய காரணம் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை இணைக்க வலியுறுத்த வேண்டும். இதன் காரணமாக வருவாய் துறை சார்ந்த பட்டா மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை 15 நாட்களுக்குள் செய்து முடிக்கலாம்,” என்று தெரிவித்தார்.

புதிய உத்தரவு காரணமாக வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் 26 வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேணஅடும். இதனால், மக்களுக்கு வருவாய் துறை சார்ந்த ஆவணங்கள் எளிதில் கிடைப்பதோடு, உடனடி தீர்வும் கிடைக்கும்.

google news
Continue Reading

Trending