latest news
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து, அவர் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து நானூற்றி எழுபத்தி ஓரு நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தது உச்ச நீதிமன்றம். வாரம் இரு நாள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுவும் நிபந்தனைகளில் ஒன்று. அதன்படி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருதார் செந்தில்பாலாஜி.
இதே போல நீதிமன்ற உத்தரவின் படி திங்கட்கிழமையான இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்றைய தினம் அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில்பாலாஜி.
அமைச்சருக்கான அரசு வாகனத்தில் வராமல் தான் பயன்படுத்தும் தான் சார்ந்த வாகனத்திலே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பன மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது, இது தொடர்பன விசாரணைக்காக செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில் வருகிற அக்டோபர் மாதம் நான்காம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிடக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் பதினான்காம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அக்டோபர் மாதம் நான்காம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.