Connect with us

latest news

கொஞ்சம் முதலீடு, அதிக லாபம்.. எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..

Published

on

உலகளவில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், சமீப காலங்களில் நுகர்வோரும் அதிகளவு நிதி மேலாண்மை மற்றும் நிதித்துறை சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பொது மக்களில் பலர், தங்களது சொத்துக்களை சேகரிக்கும் விதம், அதில் இருந்து கிடைக்கும் லாபம் உள்ளிட்டவைகளில் சிறந்த திட்டங்களில் தேர்வு செய்ய தனி கவனம் செலுத்துகின்றனர்.

இந்த மாற்றம் காரணமாக பலத்தரப்பட்ட முதலீடு திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபம் பற்றியும் அறிந்து கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் பயனர்கள் ஏராளமான முதலீட்டு விருப்பங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்வதோடு தங்களது பொருளாதாரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வரிசையில், எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய மற்றும் புதுமையான நிதி சார்ந்த சேவைகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவற்றில் பலவகை ரிக்கரிங் டெபாசிட் மற்றும் SIP எனப்படும் சிஸ்டமடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான்களை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் சி.எஸ். ஷெட்டி சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

“இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது முதலீடுகள் அனைத்தையும் அதிக ரிஸ்க் நிறைந்த முதலீட்டு திட்டங்ளில் முதலீடு செய்ய அதிகம் விரும்புவதில்லை. வங்கி சார்ந்த சேவைகள் எப்போதும் தொடர்ந்து வழங்கப்படும். இதனால், நாங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான புதிய சேவைகளை கொணடுவர முயற்சித்து வருகிறோம்.”

“எங்களிடம் அதற்கான திறன் கட்டாயம் உள்ளது. நாங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி நிகர லாபம் என்ற மைல்கல்லை அடையும் முதல் இந்திய நிறுவனமாக வர விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக 2024 நிதியாண்டில் எஸ்.பி.ஐ. வங்கி ரூ. 61,077 கோடி நிகிர லாபம் எட்டியது. இதில் அந்நிறுவனம் 21.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. தனியார் துறையில் கடன் வழங்குவதில் எஸ்.பி.ஐ. முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை ரூ. 4 லட்சம் கோடி கடன் தொகையை வெளியில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news