Connect with us

latest news

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

Published

on

Udhayanidhi Stalin

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய போது விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் தமிழகம் சாதனை நிகழ்த்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அம்மாவட்டத்தில் உள்ள நானூற்றி ஐம்பது ஊராட்சிகளுக்கு ரூபாய்  இரண்டு கோடியே என்பத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

Sports

Sports

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இரண்டாயிரத்து நூற்றி பதினோறு பேருக்கு ரூ42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்.

முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கிகடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தலைசிறந்து விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். விருதுநகரை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார் என தமிழக வீரர்களின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

google news