Finance
ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம் கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்பட்டது, ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-) விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்து, ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயக்கு (ரூ.56,400/-) விற்கப்பட்டது நேற்று.
கடந்த இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து வந்த தங்கத்தின் சென்னை விற்பனை விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
விலை குறைவு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏற்றத்தில் சென்றுள்ள விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நேற்றை விட கிராம் ஒன்றிற்கு இன்று ஐம்பது ரூபாய் (ரூ.50/-) உயர்ந்து, ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சவரன் நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் (ரூ.56,400/-) இன்று நானூறு ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டு வருகிறது. தங்கம் ஒரே நாளில் ஓரவஞ்சனை காட்டி உயர்வை நோக்கி சென்றாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை.
நேற்று கிராம் ஒன்று நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தான் இருந்து வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருக்கிறது இன்று. உயர்வினை நோக்கி தங்கம் விலை சென்றுள்ளது நகைப்பிரியர்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது.