Connect with us

latest news

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

Published

on

Tamilisai

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக தமிழக அரசை கடுமையாக வசைபாடியுள்ளார்.

தமிழகத்தின் முப்பத்தி ஆறு மருத்துவக் கல்லூரிகளில் பதினோறு கல்லூரிகளில் டீன் கிடையாது , பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது, துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை, மாறாக துணை முதல்வர் நியமனத்தில் அவசரத்தினை தமிழக அரசு காட்டியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பதினோறு மருத்துவக் கல்லூரிகளில் டீன் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் நேரத்தில், சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

udhayanidhi Stalin

udhayanidhi Stalin

தமிழக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சித்திருந்தார். அமைச்சர் ரகுபதி முதல்வர் ஸ்டாலினை மூலவர் என்றும், உதயநிதியை உற்சவர் என சொல்லியிருந்ததை சுட்டிக்காட்டி பேசிய தமிழிசை தமிழகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கெல்லாம் மூலவர் ஸ்டாலின் என்றும், துணை முதல்வர் பதவி கிடைத்து உற்சாகமாக இருப்பதால் உதயநிதி உற்சவர் என விமர்சித்தார்.

அதே போல் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, பல கட்சிகள் சேரும், பலமான கூட்டணி அமையும் வரும் காலங்களில், அது பாஜகவிற்கு ஏற்றமாக அமையும் என்றும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றத்தையே சந்திக்கும் என்றும் சொல்லியிருந்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *