latest news
நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்துள்ளது. வட-கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் மழை தமிழக மக்களை ஆனந்தப்படுத்தியிருந்தது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை புதிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது ஆராய்ச்சி மையம்.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு தென்-மேற்கு பருவமழையின் பொழிவு அதிகமாக இருந்த நிலையில், வட-கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் விவசாயிகள்.