Connect with us

Cricket

ஹர்திக் பாண்டியாவை புறக்கணித்தது எதற்கு…? சூர்யகுமார் யாதவ் கொடுத்த பேட்டி…!

Published

on

நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு குறைவான ஓவர்கள் கொடுத்தது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று டெல்லியில் துவங்கியது. போட்டியின் துவக்கம் முதலே இந்தியா சிறப்பாக விளையாடியது. முழுக்க முழுக்க பேட்ஸ்மன்களுக்கான பிட்சில் இந்த போட்டி நடைபெற்றது. ஆனால் போட்டியின் துவக்கத்தில் பௌலர்களுக்கு சாதகமாகத்தான் இருந்தது. அதாவது பந்து பௌலிங் பிச்சில் குத்திய வேகத்தில் பேட்டிற்கு வரவில்லை மெதுவாக தான் வந்தது,

இதனால் ஓப்பனர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதையடுத்து பார்ட்னர்ஷிப்பில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார்கள், நிதிஷ்குமார் 34 பந்துகளுக்கு 74 ரன்களும், ரிங்கு சிங் 29 பந்துகளுக்கு 53 ரன்களையும் எடுத்தார். நிதிஷ் ரெட்டி 7 சிக்ஸ் விளாசியது போட்டிக்கு மிகப்பெரிய உதவி.

அதையடுத்து விளையாடிய ஹர்திக் பாண்டியா, ரியான் பார்க் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 221/9 ரன்களை குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்கதேச அணியில் பெரிய அளவு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. தொடர்ந்து வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினார்கள், ஆட்டத்தின் இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது, இந்த போட்டி முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் பேட்டி கொடுத்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஓவர் கொடுக்காமல் நிதிஷ் ரெட்டிக்கு நான்கு ஓவர்களை கொடுத்தது ஏன்? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய சூரியகுமார் யாதவ் அணியில் பல பவுலர்கள் இருக்கிறார்கள்.

சிலருக்கு ஓவர்களை கொடுக்க முடியாமல் போகலாம். திட்டத்திற்கு ஏற்பதான் ஓவர்கள் கொடுக்க முடியும். சில நேரம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓவர் கொடுக்க முடியாமல் போகலாம் என்று தெரிவித்திருந்தார். நிதீஷ் ரெட்டி பேட்டிங் மட்டுமல்லாமல் பௌலிங்ளும் 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news