job news
2000 காலிபணியிடங்கள்… எந்த தேர்வு இல்லை, நேரடி நியமனம்… அரிய வாய்ப்பு உடனே முந்துங்க…!
தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2000 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் கல்லூரி, டிப்ளமோ மற்றும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியில் வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் தமிழகத்தில் பல வேலைவாய்ப்பு முகாம் நடத்தி லட்சக்கணக்கான பணியாளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். சொந்த தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களில் ஒரு சில பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும் மாநகராட்சி, மாவட்டம், மருத்துவமனைகளில் பணியாளர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது ‘தமிழக முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் கட்டுனர்கள், விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது கூட்டுறவு துறையின் மூலமாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணியிடங்களுக்கு எந்தவித எழுத்து தேர்வும் இல்லாமல் நேரடி நியமனத்தின் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டுனர்கள் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
எழுதிப் படிக்க போதுமான திறன் பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர ஆர்வம் இருப்பவர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலமாக நேர்காணலில் பங்கு பெற்றுக் கொள்ளலாம். வரும் 7-ம் தேதி மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை பொறுத்தவரையில் சென்னையில் 33 விற்பனையாளர்கள் மற்றும் 315 கட்டுனர் பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளது.