Finance
பணத்தை கொட்டுக்கொடுக்கும் கோல்-கப்பே?…ஆனா சுத்தம் ரொம்ப முக்கியம்…
உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் தான் உயிர்வாழ காரணமாக அமைகிறது. சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளும் பலரும் நோய்களின் பிடியில் எளிதில் அகப்பட்டு விட மாட்டார்கள். ‘ நொருங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆடம்பர வாழ்க்கைகாக சம்பாத்தியம் செய்து, ரசனையாய் வாழ பணத்தை சேர்க்க நினைத்தாலும் ஆகரம் உண்டே ஆக வேண்டும். கார்களில் செல்லும் வாழ்க்கை அமையாவிட்டாலும் கால்ஜான் வயிற்கு மூன்று வேளைகளும் பஞ்சம் இல்லாத வாழ்க்கையை பெற்றாலே அதுவும் கூட ஒரு விதத்தில் நிறைவை தந்தும் விடுகிறது.
மூன்று வேளை உணவிற்காக கஷ்டப்படும் ஜனங்களும் இருந்து வருகிறார்கள். வாயை கட்டி வயிற்றை சேர்த்து வைத்த பணம் என்ற சொல்லும் அளவில் உணவின் தொடர்பு இல்லாத வருமானம் இருக்கவே முடியாது. உணவை ருசியாக கொடுத்து அதன் மூலம் வருமானத்தினை ஈட்டி வருபவர்களும் ஏராளம் தான்.
உணவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் லாபம் கொஞ்சம் அதிகம் தான் என இத்தொழிலில் வெற்றி பெற்றவர்கள் சொல்லியதையும் கேட்டிருப்போம். எளிதில் கெட்டு விடும் என்கின்ற காரண்த்தினால் சமைத்து வைத்த உணவு வகைகள் எல்லாம் விற்று தீர்ந்து விட்டால் தான் இந்த தொழிலில் லாபம் என்பதையும் பார்க்க முடியும்.
இந்த வணிகத்தில் தங்களை ஈடுபடுத்தி , வாழ்க்கையை துளைத்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது காலம் முற்றிலுமாக மாறி விட்டதால், இந்த பாஸ்ட் ஃபூட்களின் வருகை வேற லெவலாக இருந்து வருகிறது. இது போன்ற உணவுவகைகளை தயாரிக்கும் நேரம் மிகக்குறைவு என்பதால் இதனை எளிதில் சமைத்து விடலாம்.
அதிலும் இது போன்ற உணவுவகைகளில் தனக்கென ஒரு தனி மாஸை தன்னுள் வைத்திருப்பது “கோல் கப்பே”.
பெயர் ஏதோ புதிதாக இருக்கிறது என்ற எண்ணம் வருகிறதா?. அனைவருக்கும் தெரியும் விதமாக இதனைப் பற்றி சொன்னால் இப்போது தமிழில் இதற்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் ‘பானி பூரி’.
“நன்கு பொரிக்கப்பட்ட சிறிய பூரிகள், விதவிதமான சுவைகளில் பானி, சட்னி, பச்சை மிளகாய், வெங்காயம், கெட்டித் தயிர், உருளைக்கிழங்கு, சாட் மசாலா…இதனை எல்லாம் சேர்த்து தான் பானிபூரி சமைக்கப்படுகிறது. நினைத்துப் பார்த்தாலே நிமிடத்தில் நாக்கில் எச்சில் சுரக்க வைத்து விடும் பானி பூரியின் சுவைக்கு ஈடு கிடையாது.
பலவித சுவைகளை உள்ளடக்கியது. சுத்தமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி உடலுக்கு உகந்தது. உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும். இது, அதிக கலோரி கொண்டது. அதோடு உடனடி எனர்ஜி தரக்கூடிய புரதச்சத்து மிகுந்த உணவு. ஆனால், இதில் சேர்க்கப்படும் கெட்டித் தயிர் மற்றும் சோடியம் உப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்,அது நோய்கள் பல வருவதற்கு வழிவகுக்கும் என்ற கலவையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.
இந்த பானி பூரியின் பிறப்பிடம் பிகார் மாநிலம் எனச் சொன்னாலும் இப்போது உலகமெங்கும் பிரபலமாகி விட்டது. மிகக்குறைவான நேரத்திலேயே இதனை சமைத்து விடலாம் என்றாலும் இது குறைவான முதலீட்டில் லாபத்தை அதிகமாக ஈட்டித் தரக்கூடிய ஒன்றாகவும் இருந்து வருகிறது.
அதிகமான விற்பனை இருந்தால் மட்டுமே இதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும் என்ற நிலை கிடையாது. விற்பனைக்கு ஏற்றது போல இதன் லாபம் அமைந்து வருகிறது.
பகுதி நேர வேலையாக பார்ப்பவர்களுக்கு ‘பானி பூரி’ விற்பனையின் மூலம் நல்லதொரு ஊதியம் கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையிருத்தல் வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உழைப்பவர்கள் இந்த ‘கோல் காப்பே’ (எ) ‘பானி பூரி”யை எப்படி சுத்தமாக, சுகாதாரமாக சமைத்து கொடுக்கிறார்கக்ளோ அதையே முன் உதாரணமாக வைத்துக் கொண்டு இதனை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்களும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்பதுவும் ‘பானி பூரி’ விரும்பிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.