automobile
மிட் ரேஞ்ச் விலையில்… அறிமுகம் செய்யும் ரியல்மி புது ஸ்மார்ட்போன்… என்னென்ன வசதிகள் தெரியுமா..?
ரியல் மீ நிறுவனம் புதிய வகை 5g ஸ்மார்ட் ஃபோன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை realme நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட் போனிற்கான டீசரும் வெளியாகி இருக்கின்றது. அதன்படி புதிய ரியல் பி1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் வீடியோ டெக்டிமெண்ட் சிட்டி 7300 எனர்ஜி 5ஜி பிரௌசர், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, டிஸ்ப்ளே பின்பக்கம் வட்ட வடிவம் கொண்ட கேமரா கட்அவுட் ஆகியவை வழங்கப்படுகின்றது.
இந்த ஸ்மார்ட் போன் சீரியஸ் மாடல்களில் புதுவரவாக இணைந்துள்ளது. முன்னதாக இதே சீரியஸில் ரியல்மி பி 1, ரியல்மி பி1 ப்ரோ மற்றும் ரியல்மி p2, ரியல்மி p2 pro உள்ளிட மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வரிசையில் புதிய realme p1 ஸ்பீடு ஸ்மார்ட் போன் வரும் 15ஆம் தேதி மதியம் 12 மணிக்கு லான்ச் செய்யப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் உள்ள பிரத்தியேக மைக்ரோசைட்டில் இடம் பெற்றுள்ளன. இதில் இருக்கும் தகவல் படி realme p1 போன் கூலிங் வசதி, 50 எம்பி ப்ரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வழங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்திருக்கின்றது. வரும் 15ஆம் தேதி இந்த செல்போன் லான்ச் ஆக உள்ள நிலையில் இதன் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.