Connect with us

Cricket

இங்கிலாந்திடம் வேகாத பாகிஸ்தான் பருப்பு!…சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி…

Published

on

England Team

ஜோ ரூட் தனது ஆறாவது இரட்டை சதத்தை டெஸ்ட் போட்டிகளில் அடித்து இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இருபதாயிரம் ரன்களை டெஸ்ட் போட்டிகளில் கடந்த இங்கிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையையும் அடைந்தார்.

இப்படி சாதனைகள் ஒரு புறம் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது இங்கிலாந்து. டாஸின் படி முதலாவதாக பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. மூன்று டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் மோதுகிறது இந்த இரண்டு அணிகளும்.

முதல் போட்டி முல்தான் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது.  முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடி ஐனூற்றி ஐம்பத்தி ஆறு ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.அ பாகிஸ்தானின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதமடித்திருந்தனர். பத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது.

ஏழு விக்கெட்டுகளை இழந்து என்னூற்றி இருபத்தி மூன்று ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹேரி புரூக் முன்னூற்றி பதினேழு ரன்களை குவித்தார். முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்துவங்கியது பாகிஸ்தான்.

England

England

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் தடுமாறியிருந்தது பாகிஸ்தான். இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்ப்பார்களா? என அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களது எதிர்பார்ப்பின் மீது மண்ணைத்தூவியது பாகிஸ்தான் அணி.

இருனூற்றி இருபது ரன் களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது சொந்த மண்ணில் வைத்தே இங்கிலாந்திடமிருந்து இன்னிங்ஸ் தோல்வியை பரிசாக வாங்கிக் கொண்டது பாகிஸ்தான். இங்கிலாந்து அணியின் இடது கை பந்து வீச்சாளர் ஜாக் லீச் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரு இன்னிங்ஸ் மற்றும் நாற்பத்தி ஏழு ரன்களில் தோல்வியைத் தழுவியதுன் பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *