latest news
அணு ஆயுத எதிர்ப்பு…ஜப்பான் நிறுவனத்திற்கு நோபல் பரிசு அறிவிப்பு…
இயற்பியல், வேதியல், இலக்கியம், மருத்துவம் , அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு நோபல் பரிசு . இதனை பெறுபவர்களுக்கு ஒரு தங்கப்பதக்கம், ஒரு பட்டயம், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
வேதியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது இத்தகைய பரிசு வழங்குவது. முதன் முதலாக நோபல் பரிசு 1901ம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த பரிசினை பெறுபவர்களுக்கான தேர்வுகள் தீவிரமாக நடத்தப்படும். மிகக் குறைந்த பட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டு வந்தது, ஒரு சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போன காலங்களும் உண்டு.
ஆனால் இப்போது மருத்துவம், இயற்பியல், வேதியல் இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தகுதி படைத்த நபர்களுக்கு வழங்கப்படும் இந்த நோபல் பரிசு திரும்பப் பெறத்தக்கதல்ல.
பலவித புகையற்ற ராணுவ வெடி பொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்கை கண்டுபிடித்தவர் நோபல்.
அவரால் எழுதப்பட்ட உயிலின் அடிப்படையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. சக மனிதர்களை வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபல் தனது கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு’ பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் 2024ம் ஆண்டிற்கான பரிசுகளை வென்றவர்கள் பற்றிய அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் பற்றிய முக்கிய அறிவிப்பில், உலகில் அணு ஆயுதங்களின் பயன்பாடு அறவே இருக்கக் கூடாது என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜப்பானை சேர்ந்த நிறுவனம் தான் அமைதிக்கான, இந்தாண்டிகான பரிசினை பெறுபவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த ‘நிஹோன் ஹிடங்யோ’ என்ற அந்த நிறுவனம் தான் இந்த பரிசினை வென்றுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவரின் விவரம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவுப்பும் வெளியாகியுள்ளது.