Connect with us

govt update news

ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகணுமா…? அப்ப இத பண்ணுங்க… அருமையான வழி…!

Published

on

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அது கன்பார்ம் டிக்கெட்டாக பெற இந்தியன் ரயில்வே சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் பொது போக்குவரத்து துறையில் ரயில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில்களையே பெரும்பான்மையாக தேர்வு செய்கிறார்கள். அதற்கு காரணம் பயணச் செலவு குறைவு, நேரம் உள்ளிட்ட காரணங்களால் தான்.

மிக குறைந்த கட்டணத்தில் டிராபிக் போன்ற எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உரிய நேரத்தில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியும் என்பதால் ரயில் பயணத்தை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இப்படி முன்கூட்டியே புக்கிங் செய்வதால் ரயில் சீட் கிடைத்து பயணம் செய்வது எளிமையாகின்றது.

ஐஆர்சிடிசி ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும் என்றால் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் இருக்கின்றது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல நேரங்களில் சீட்டுக்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதும் நடக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் சீட்டுகள் கிடைப்பது என்பது சந்தேகம் தான்.

இந்நிலையில் பயணிகள் சிரமம் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்தியன் ரயில்வே சில  வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது.  விகல்ப் யோஜனா எனப்படும் மாற்று ரயில் தங்குமிட திட்டத்தின் வாயிலாக பயணிகள் சிரமம் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒரே நேரத்தில் பல ரயில்களை இந்த திட்டத்தில் பயணிகள் தேர்ந்தெடுக்க முடியும்.

கன்ஃபார்ம் சீட்டை பெறுவதற்கான வாய்ப்புகளும் இதில் இருக்கின்றது. தற்போது தீபாவளி வர இருப்பதால் பயணிகள் யோஜனா திட்ட மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். 120 நாட்களுக்கு முன்பாக விகல்ப யோஜனாவில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

முடிந்த அளவு பயணிகளுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க இந்த திட்டம் முயற்சி செய்கின்றது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விகல்ப ஆப்ஷன் தானாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலமாக டிக்கெட் வெயிட்டிங்கில் இருந்தால் மற்றொரு வழிதடத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும். மற்ற ரயில் சீட்டுகள் இருந்தால் பயணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் கன்ஃபார்ம் சீட் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *