Connect with us

Cricket

ஆர்வத்தில் நாக்கை நீட்டி நாகினி ஆட்டம்…இந்தியாவிடம் வாங்கிக் கட்டி வாலை சுருட்டுமா வங்கதேசம்?…

Published

on

Bangladesh

இந்திய மண்ணில் தனது சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு வருகிறது வங்கதேச ஆண்கள் கிரிக்கெட் அணி. இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் பங்கேற்பது தான் இந்த சுற்றுப் பயணத்தின் நோக்கம். இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடர் முடிவவடைந்து விட்டது.

பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வென்று, விளையாட்டு மைதானத்தில் தங்களுக்கே உரித்தான நாகினி ஆட்டத்தை இந்தியாவிலும் ஆடிப்பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் வந்து தரையிறங்கியது பங்களாதேஷ் அணி.

அவர்களை துவக்கத்தில் இருந்தே தட்டி தூக்கி வருகிறது இந்திய அணி. மழை குறுக்கிட்டு போட்டி முழுமையாக நடைபெறாமல் இருந்த நேரத்திலும், கிடைத்த நேரத்தில் கிடுக்குப்பிடி போட்டது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி.

அரை நாளில் அசால்டு செய்து பங்களாதேஷை பதம் பார்த்தனர் இந்திய வீரர்கள்.

Suryakumar

Suryakumar

ஒரு வழியாக டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில்  விளையாட ஆரம்பித்தது.

டெஸ்ட் போட்டியில் கூட சிறிது நேரம் தெளிய வைத்து பிறகு தனது அதிரடி அடுத்தடுத்து கொடுத்த இந்திய அணி, முடிவடைந்திருக்கும் இரண்டு டி-20 போட்டிகளிலும் ஒரு இடத்தில் பங்களாதேஷை நிமிர விடச் செய்யவே இல்லை.

இந்நிலையில் இன்று இரவு மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற் உள்ளது. இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்ட இருபது ஓவர் கிரிக்கெட் சாம்பியன் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை வாஷ் அவுட் செய்து வங்கதேசத்தை வாலை சுருட்டிக்கொண்ட அவர்களது நாட்டிற்கு திரும்பி செல்ல வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

google news