Connect with us

Cricket

இனி சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு இருக்கா…? சூர்யகுமார் யாதவ் சொன்னது இதுதான்…!

Published

on

வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடிய காரணத்தால் தொடர்ந்து அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டியளித்து இருக்கின்றார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே மாஸ் காட்டியது. ஓப்பனர் அபிஷேக் ஷர்மா நான்கு ரன்களில் வெளியேறினார்.

அதை தொடர்ந்து இறங்கிய சஞ்சு சாம்சன் தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 111 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். சர்வதேச டி20-யில் அறிமுக சதத்தை பூர்த்தி செய்தார். குறிப்பாக பவுண்டரி சிக்ஸர்கள் மூலம் மட்டும் 19 பந்துகளில் 92 ரன்களை குவித்து அசத்தினர். சர்வதேச t20 யில் 40 பந்தில் சிக்சர் அடித்து தற்போது இந்திய அணியில் இருக்கும் டி20 வீரர்களில் சாம்சன் தான் அதிவேக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன.

இதற்கு முன்பு ரோகித் சர்மா 35  பந்தில் அடித்தது சாதனையாக இருந்தது. சஞ்சு சம்சனை போல கேப்டன் சூர்யா குமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 297 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் வெறும் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் பேட்டி கொடுத்திருந்தார். அதில் ‘வீரர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் அவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட முடியும். இதனால் களத்திலும் களத்திற்கு வெளியேவும் வீரர்களை முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

49 வது ரன்களிலும் 99 ஆவது ரண்களிலும் இருக்கும்போது சுயநலமில்லாமல் பெரிய ஷாட்டுகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துபவர் தான் எங்களுக்கு தேவை இன்று சஞ்சீவ் சாம்சன் அதனை செய்தார்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் சூரியகுமார் யாதவியின் இந்த பேட்டி மூலமாக இனி சஞ்சு சம்சனுக்கு ரெகுலராக ஓப்பனராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *