Connect with us

job news

வேலை கிடைக்கலையா…? உங்களுக்கு சரியான வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!

Published

on

பிரதமர் தொழில் பயிற்சி திட்டம் மூலமாக இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

2024 மற்றும் 25ஆம் நிதியாண்டுக்கு மத்திய பட்ஜெட் கூட்டத்தில் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் முன்னணி நிறுவனங்களில் உதவி தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வரும் டிசம்பரில் முன்னணி நிறுவனங்களில் சுமார் 1.2 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை திறன் மற்றும் சூழலுக்கு தயார் செய்யும் வகையில் நிறுவனங்களில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கின்றது. 5 வருடங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு 1.25 மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வண்ணம் பிரதமர் பயிற்சி திட்டம் 2024 தொடங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இதில் மகேந்திரா அண்ட் மகேந்திரா, மேக்ஸ் லைஃப், ஆலம்பியா பர்மா, டிசிஎஸ் என்று 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. நிறுவனங்களில் நேரடி செயல்பாடுகள் மற்றும் பணி அனுபவத்தை மாணவர்கள் பெற முடியும்.

மேலும் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக மாதம் 5000 வழங்கப்படும். இதில் 4500 அரசு தரப்பில் இருந்தும், 500 நிறுவனம் மூலம் வழங்கப்படும். 6 ஆயிரம் ரூபாய் ஒருமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். குறைந்தது 6 மாதங்கள் நேரடி அனுபவம் பெறும் படி பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த இணையதள முகவரியில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 25ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அதைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நீங்கள் பயிற்சி செய்ய விரும்பும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பயிற்சிகள் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

google news