Connect with us

Featured

இந்த இளம் வயதில் இப்படி ஒரு சாதனையா?…அதிசயிக்க வைத்த நேபாள இளைஞர்…

Published

on

Achievement

சாதனைக்கு வயது தடையில்லை, சாதிக்க நினைப்பவர்களுக்கு எதுவும் தடையில்லை. தடைகள் எது வந்தாலும், அதனை எல்லாம் தவிடு பொடியாக்கி, இலக்கை நோக்கி முன்னேறி, வீறு கொண்டு முயற்சி செய்து அதில் முன்னேற்றம் கண்டவர்கள்
அதிகம்.

சாதனைகள் என்பது பிறந்தோம், வாழ்ந்தோம் என இல்லாமல் வாழ்ந்ததற்கான அர்த்தத்தையும்,
மறைந்த பின்னரும் பெயர் மண்ணில் நிலைத்து நிற்கச் செய்து விடும். முதுமைப் பருவத்திலும் தங்களது சாதனை படைக்கு முயற்சியையும், தொடர் போராட்டங்களுக்கு பின்னர் அவர்களது முயற்சிகளில் வெற்றியும் பெற்றவர்கள் பற்றிய செய்திகளையும் நம்மில் பலரும் தெரிந்திருப்போம்.

இப்படி முதுமையிலும், முதுமை காலத்தினை நெருங்குபவர்களின் சாதனைகளும், அதற்கான முயற்சிகளும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இளம் வயது சாதனையாளர்களையும் சந்தித்து வருகிறது இந்த உலகம். பள்ளி பருவத்திலேயே ஏதாவது சாதனைக்கு தங்களை சொந்தக்காரராக மாற்றி விட வேண்டும் என்ற
உறுதியோடு வாழ்ந்து வருபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

பள்ளி மானவர்கள் தங்களது மாணவப் பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதன் பிறகு கிடைக்கும் நேரத்தை வைத்து தங்களது
திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் தங்களை சாதனையாளர்களாக மாற்றியும் வருகிறார்கள்.

நேபாளத்தைச் சேர்ந்த பதினான்கே வயதான நிமா ரின்ஜி என்பவர் தனது சாதனையின் மூலம் கின்னஸில் இடம்
பிடித்திருக்கிறார்.

Nepal

Nepal

இவரது சாதனையின் உயரம் சற்று அதிகமே என்று கூட நினைக்க வைத்து விட்டது. உலகின் மிக உயரமான பதினான்கு மலை சிகரங்களில் ஏறியவர் என்ற இவரின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

எவெரெஸ்ட், கே-2, கஞ்சண்சுங்கா, லோட்டஸ், மகாலு, சோ ஓயு, தெளலாகிரி 1, மனஸ்லு, நங்கா பர்பத்
உள்ளிட்ட என்னூறு கிலோ மீட்டருக்கும் அதிகமான சிகரங்களும் இதில் அடங்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *