govt update news
இனி நீங்க ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… வீட்டுக்கு தேடி வரும் பொருள்கள்… வேற லெவல் திட்டம்…!
ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தார்களுக்கு ரேஷன் பொருட்கள் இனி வீட்டுக்கு வந்து கொடுக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் பொருள்களை வழங்குவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சக்கரை உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவிவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் பலர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். மத்திய பிரதேச அரசு மாநிலத்தின் பழங்குடியின பகுதிகளில் ‘ரேஷன் ஆப்கே துவார்’ என்கின்ற திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. இதன் மூலம் பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல தேவை இல்லை.
வீட்டில் இருந்தே உதவி பொருட்களை எளிய முறையில் பெற்றுக் கொள்ள முடிகின்றது. மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகின்றது. இந்த உதவிகளை மேலும் வசதியாக்குவதற்காக தான்’ ரேஷன் ஆப்கே துவார்’ என்கின்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படுகின்றன.
அதிலும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் அனைத்து மக்களும் வீட்டிலேயே ரேஷன் பெரும் வகையில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் கைரேகை பதிவு செய்து அடையாளத்தை நிரூபிக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்கும் என்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்கின்றது. இதேபோன்று டெல்லியில் கர்-கர் ரேஷன் யோஜனா என்ற பெயரில் வீட்டுக்கு சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெல்லியில் உள்ள 72 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் ஆப் கேதுவா என்ற திட்டத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு ரேஷன் வசதியை எளிய முறையில் வழங்குவது தான். அரசின் ரேஷன் விநியோக செயல் முறையை வெளிப்படை தன்மையாக மாற்றுவதற்கு இந்த திட்டம் உதவுகின்றது. தற்போது மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். மக்கள் தங்கள் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.