govt update news
தீபாவளி வந்தாச்சு… கார் வாங்க போறீங்களா..? குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்…!
கார் வாங்குவதற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது குறித்து விவரங்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் மக்கள் புது பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அந்த சமயத்தில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்பதற்காக தான். அதற்கு ஏற்ப பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் தங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றது.
தற்போது தீபாவளி பண்டிகை வர இருப்பதால் மக்கள் அதிகளவில் ஷாப்பிங் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பார்கள். பலர் பண்டிகை காலங்களில் புதிய கார் வாங்குவதற்கும் திட்டமிட்டு இருப்பார்கள். நீங்களும் இந்த சீசனில் கார் வாங்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பண்டிகை காலத்தில் புதிய கார்களை வாங்க விரும்புபவர்கள் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள் தொடர்பான தகவலை தெரிந்து கொள்வோம்.
இந்த பண்டிகை காலங்களில் கடன் தேவை அதிகமாக இருப்பதால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிறந்த வட்டி விகிதத்தில் கார்களுக்கு கடன் வழங்குகின்றது. சில மாடல்களுக்கு 100% நிதி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதம் என்பது பலருக்கும் தெரிவது கிடையாது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா: இந்த வங்கி கார் கடனுக்கு 8.70 சதவீதம் முதல் 10.45 சதவீதம் வரை வட்டிவிகிதம் தருகின்றது. ரூபாய் 5 லட்சம் காருக்கு கடன் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ ரூ. 10,307 முதல் ரூ. 10,735 செலுத்த வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி: இந்த வங்கி கார் கடனுக்கு 8.75 சதவீதம் முதல் 10.65 சதவீதம் வரை வட்டிவிகிதம் உள்ளது. ரூ. 5 லட்சம் கார் கடன் 5 ஆண்டுகள் வரை இருக்கும். ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ ரூ. 10,319 முதல் ரூ. 10,772 செலுத்த வேண்டும்.
பாங்க் ஆப் பரோடா : இந்த வங்கி கார் கடனுக்கு 8.95 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும். இஎம்ஐ ரூ. 10,367 முதல் ரூ. 11,300 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் ரூ. 750 வரை இருக்கும்.
UCO வங்கி: இந்த வங்கி கார் கடனுக்கு 8.45 சதவீதம் முதல் 10.55 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும். மேலும், இஎம்ஐ ரூ. 10,246 முதல் ரூ. 10,759 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் தேவையில்லை.
கனரா வங்கி: இந்த வங்கி கார் கடன் வட்டி விகிதம் 8.70 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை உள்ளது. இஎம்ஐ ரூ. 10,307 முதல் ரூ. 11,300 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் தேவையில்லை.